வாழ்க வளமுடன்

Monday, 16 May 2016

நதிகளின் சொந்தம் நாடு
                                           சு.துரைராஜ்

கேரளம் நதிகளால் செல்வாக்குப் பெற்ற நாடாகும். கேரளத்தில் மொத்தம் 44 நதிகள் உள்ளது. இதில் 41 நதிகள் மேற்கு நோக்கியும், மூன்று நதிகள் கிழக்கு நோக்கியும் பாய்கிறது.
       பொதுவாக நீளம் குறைந்த நதிகள் கேரளத்தில் காணப்படுகிறது. நதிகளுக்கு தண்ணீர் கொண்டுவரும் நீர்பிடிப்பு பகுதிகளின் அளவைப் பொருத்து நாட்டிலுள்ள நதிகளை மகா நதிகள், சிறிய நதிகள், மிகச்சிறிய நதிகள் என பிரித்திருக்கிறார்கள். 20,000 ச. கி.மீ நீர்பிடிப்புள்ள நதிகள் மகா நதிகள். இவ்வளவு பரப்பளவுள்ள ஒரு நதி கூட கேரளத்தில் இல்லை எனலாம்.
       2.000 முதல் 20,000 ச.கி.மீ நீர்பிடிப்பு பகுதிகள் உள்ள நதிகள் நடுத்தர நதிகள், கேரளத்திலுள்ள பெரிய நதிகளான பெரியார்,பாரதப்புழை, பம்பை. சாலியார் போன்றவை நடுத்தர நதிகளாகும். மீதியுள்ள 40 நதிகள் மைனர் நதிகளாகும். 2000 ச.கி.மீட்டருக்கும் குறைவான நீர்பிடிப்புப் பகுதிகளே இந்தப் பகுதிகளின் அளவாகும்.
       கேரள அரசாங்கத்தின் கணக்கின்படி 15 கி.மீட்டருக்குக் கூடுதல் நீளமுள்ள புழைகளெல்லாம் நதிகள் என்றுக் கூறலாம்.20 கி.மீட்டருக்கு குறைவான நீளமுள்ள மூன்று நதிகள் இங்கே உள்ளது. ராமபுரம் புழை, ஆயிரூர் புழை, மஞ்சேஸ்வரம் புழை போன்றவையாகுமிது. இதில் மிகவும் சிறியது மஞ்சேஸ்வரம் புழையாகும். இதன் நீளம் 16 கிலோமீட்டராகும்.
       100 கிலோமீட்டருக்கு கூடுதல் நீளமுள்ள 11 நதிகள் கேரளத்தில் உள்ளது. இவற்றில் நான்கு நதிகள் 160 கி.மீட்டருக்கும் கூடுதல் நீளம் உள்ளதாகும். பெரியார், பாரதப்புழை, பம்பை, சாலியார் போன்றவையாகும் இந்த மகா நதிகள். இதில் மிகவும் நீளம் கூடுதல் பெரியார் நதியாகும்.
       கேரளத்திலுள்ள எல்லா நதிகளும் மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகிறது. 41 நதிகளும் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்கிறது. சரிவு கூடுதலான நில அமைப்பு உள்ளதால் எல்லா நதிகளும் மிக வேகமாக பாய்கிறது. அதனால் நம்முடைய நதிக்கரைகளில் கனிம வளங்களின் அளவு குறைவாகும்..

பெரிய ஆறு

       பெயரைப் போலவே பெரிய்ய ஆறாகும் பெரியாறு. கேரளத்திலுள்ள மிக நீளமான நதி. இந்த நதி பண்டையகாலத்தில் சூர்ணி என்ற பெயரில் அழைக்கப்பட்டிருந்தது. இதனுடைய நீளம் 224 கிலோமீட்டராகும்.
       சிவகிரி மலைத்தொடர்களில் பெரியாறு உற்பத்தியாகிறது. இங்கிருந்து வடக்கு நோக்கிப் பாயும் பெரியாறுடன் முல்லையாறு, பெரும்துரையார், கட்டப்பனையாறு, செருதோணியாறு, பெரிஞ்சன் குட்டியாறு, முதிரப்புழை போன்ற கை வழிகள் வந்து சேர்கிறது. பின்னர் பெரியாறு மேற்கு நோக்கிப் பாய்கிறது. இதற்கிடையில் தொட்டியார், இடமலையார் போன்ற கிளை நதிகளும்  பெரியாறுடன் வந்து சேர்கிறது.
       காலடியில் பெரியாறு இரண்டாகப் பிரிகிறது. அதில் ஒரு கிளை மங்கலப்புழையுடன் இணைகிறது. பின்னர் அது சாலக்குடிக்குடி புழையுடன் சேர்ந்து அரபிக்கடலில் சென்று சேர்கிறது. இரண்டாவது கிளை ஆலுவாய் வழியாகப் பாய்ந்து பல கைவழிகளாகப் பிரிந்து இறுதியில் வாராப்புழைக்கருகில் வைத்து வேம்ப நாட்டுக் காயலில் கலக்கிறது.
      

       கேரளாவில் மிக அதிகமான அணைகளுள்ள நதி பெரியாராகும். மொத்தம் பத்தாகும். இவற்றில் பெரும்பாலானவை பெரியாரின் கிளை நதிகளிலாகும். கேரளத்தின் முதல் நீர்மின்திட்டமான பள்ளிவாசல் உட்பட ஏராளமான நீர்மின் திட்டங்களும், நீர்பிடிப்புப் பகுதிகளும் பெரியாரில் உள்ளது. குண்டளை அணையும், முதிரம் புழையிலுள்ள அணையும், மாட்டுப்பட்டியிலுள்ள அணைக்கட்டும் பள்ளிவாசல் திட்டத்திற்காக பயன்படுத்தப்படுகிறது.
                பள்ளிவாசல் நீர்மின்திட்டத்தின் உபயோகத்திற்குப் பிறகு வெளிவரும் தண்ணீரும் பெரியாரின் துணை நதியான முதிரப்புழயின் தண்ணீரும் உபயோகித்து செங்குளம் நீர்மின்திட்டம் செயல்படுகிறது. பெரியாரின் துணைநதியான பண்ணியாரிலும் ஆனையிரங்கல், வெள்ளத்தூவல் போன்ற இடங்களில் இரண்டு அணைகள் உள்ளது. பெரியாரின் மற்றொரு துணைநதியான இடமலையாரிலும் ஒரு அணை உள்ளது.

       இடுக்கி நீர்மின்திட்டம் பெரியாரின் பெருமைக்குரியதாகும். இது கேரளத்தின் மிகப்பெரிய நீர்மின் திட்டமாகும்.. இடுக்கி ஆர்ச் டாமும், செருதோணி அணையும், குளமாவு அணையும் இந்த திட்டத்தில் உட்பட்டதாகும்.
       கல்லார்குட்டி திட்டம் என்றழைக்கப்படும் நேரியமங்கலம் திட்டமும் பெரியாறிலாகும். கல்லார்குட்டியில் அணைகட்டி இந்த திட்டத்தில் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. பெரியார் மீண்டும் கீழ்நோக்கிப் பாயும் போது வேறொரு நீர்மின்திட்டமும் செயல்படுகிறது. அதுதான் லோவர்பெரியார்.
       கேரள வரலாற்றில் பெரியாற்றிற்கு மிகப்பெரிய இடம் உள்ளது. புராதன கேரளத்தில் மிகவும் புகழ்பெற்ற துறைமுக நகரங்களில் ஒன்றான கொடுங்கல்லூர் பெரியாற்றின் கரையில் இருந்ததாக கூறப்படுகிறது. பெரியாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கத்தினால் கொடுங்கல்லூர் துறைமுகம் அழிந்தது..மைசூரில் இருந்து கேரளத்தின் மேல் போர்தொடுத்த திப்புசுல்த்தானிற்கு திருவிதாங்கூருக்குள் நுழைய முடியாமல் போனதற்கு பெரியாற்றின் வெள்ளப்பெருக்கமே காரணமாயிருந்ததாம்.
                                                தேக்கடியும் பெரியாறும்
       பெரியாரின் ஆரம்பத்தில் அணை கட்டி உருவாக்கிய செயற்கை ஏரியே பெரியார் ஏரி. இந்த ஏரிக்குச் சுற்றிலுமாக கேரளத்திலேயே மிகப் பெரிய வனவிலங்கு சரணாலயமான தேக்கடி அமைந்துள்ளது. இது கேரளத்தின் முதல் வனவிலங்கு சரணாலயமாகும்
       கடல்மட்டத்திலிருந்து சுமார் 840 மீட்டர் உயரத்தில் தேக்கடி அமைந்துள்ளது.
                     கேரளத்தின் சொந்தம் நிள
       பாரதப்புழை,நிள கம்பீரமும், அழகும் நிறைந்து தழும்பும் இரண்டு பெயர்கள். பெயரில் மட்டுமல்ல நேரில் காணும் போதும் இந்த அழகை இரசிக்கலாம்.
       பாரதப்புழையைப் போன்று கேரளத்தின் கலாச்சாரத்திலும், இலக்கியத்திலும் தாக்கம் செலுத்திய வேறொரு நதியில்லை. இருப்பினும், கேரளத்தின் சொந்தம் நதி உற்பத்தியாவது தமிழ்நாட்டிலுள்ள ஆனைமலையிலாகும்.
       கேரளத்தின் இரண்டாவது பெரிய நதி பாரதப்புழை ஆகும். 209 கிலோமீட்டராகும் கேரளாவில் இதன் நீளம். ஆனால் தமிழ்நாட்டில் பாயும் பகுதிகளை கணக்கிட்டால் இதன் நீளம் 251 கிலோமீட்டராகும். அதாவது பெரியாரை விடப் பெரியவள்.
       ஆனைமலையிலிருந்து பொள்ளாச்சி வழியாக பாய்ந்து வரும் அமராவதிப்புழையே கேரளாவில் பாரதப்புழை என்றழைக்கப்படுகிறது.. இதற்கு ஏராளமான துணை நதிகள் உள்ளது. வரலாற்றுப் புகழ்பெற்ற கல்பாத்தி புழை அதிலொன்றாகும்.
       ஆனமலையிலிருந்து உற்பத்தியாகும் கோரயார், வரட்டயார் ஆகிய நதிகளுடன் வாளையாரும், மலைம்புழையாரும் சேர்ந்ததே கல்பாத்திப்புழை.கேரளாவின் மிகப்பெரிய நீர்பாசனத்திட்டமான மலம்புழை இந்தப்புழையில் தான் உள்ளது. ஏராளமான தண்ணீர் வரத்துள்ள இரண்டாவது அணைக்கட்டான வாளையார் அணை கல்பாத்திப்புழையில்தான் உள்ளது.
       ஆனைமலையிலிருந்து உற்பத்தியாகும் காயத்திரிப்புழையும் பாரதப்புழையின் துணை நதியாகும். மாயண்ணூர் என்ற இடத்தில் வைத்து காயத்திரிப்புழை பாரதப்புழையுடன் சேர்கிறது. இதற்கு முன்பு மங்கலம்புழை, அயிலூர்புழை, வண்டாழிப்புழை, மீன்கரப்புழை, சுள்ளியார் போன்றவை காயத்திரிப்புழையுடன் சேர்கிறது. மாயண்ணூர் முதல் மேற்குப் பக்கமுள்ள புழை பாரதப்புழை என்று அழைக்கப்படுகிறது.
       பாரதப்புழையுடன் சேரும் மற்றொரு துணை நதியாகும் கண்ணாடிப்புழை. இது அமராவதிப்புழையின் ஒரு பகுதியாகும். சிற்றூர், தத்தமங்கலம் பகுதிகளின் வழியாக இந்தப்புழை பாய்கிறது.. சைலண்ட்வாலியிலிருந்து உற்பத்தியாகும் துதுப்புழையும் பாரதப்புழையின் துணை நதியாகும்..சுத்தமான தெளிந்த நீருள்ள துதுப்புழை சைலண்ட்வாலிப் பகுதியில் குந்திப்புழை என்று அழைக்கப்படுகிறது.
       வரலாற்றுப் புகழ்பெற்ற மாமாங்கம் நடைபெறுவது பாரதப்புழையின் நதிக்கரையான திருநாவாயாவாகும். குஞ்சன் நம்பியார் பிறந்த இடமான கிள்ளிக்குறிச்சிமங்கலமும், செருதுருத்தியிலுள்ள கேரள கலாமண்டலமும் நிள நதிக்கரையில் தான் அமைந்துள்ளது.
       பாலக்காடு மாவட்டம் தொழிற்துறையில் உயர்ந்து நிற்பதற்கு காரணமாக இருப்பது நிள நதியாகும். மாவட்டத்தின் வேளாண் வளர்ச்சிக்கு காரணமாக இருப்பதும் நிள நதியாகும்.
       மலப்புரம் மாவட்டத்திலுள்ள பொண்ணானி என்ற இடத்திலிருந்து பாரதப்புழை அரபிக்கடலில் கலக்கிறது.
       ஒரு காலத்தில் வருடம் முழுவதும் தண்ணீர் நிரம்பி வழிந்திருந்தது. ஆனால், தற்பொழுது மலைக்காலத்தில் மட்டுமே நிள நதியில் தண்ணீர் நிரம்பி வழிகிறது. அதிகளவிலான மணல் வாரலும், தூய்மையின்மையே இதற்குக் காரணமாகும்.
      
                   பம்பை
       கேரளத்திலுள்ள ஆறுகளில் அளவில் மூன்றாவதாக இருப்பது பம்பை நதியாகும். பம்பை நதியென்றும் பம்பையாறென்றும் இது அழைக்கப்படுகிறது. ஏராளமான துணை நதிகள் உள்ள பம்பை நதி மத்திய திருவிதாங்கூரின் உயிர்நாடியாகும்.
       கடல் மட்டத்திலிருந்து1650 மீட்டர் உயரமுள்ள பீருமேட்டில் உற்பத்தியாகிறது. கருவாற்றுப்பாறை மலையிலிருந்து நீரொழுக்குடன் வட்டப்பாறையிலிருந்துள்ள கக்கியாரும், சின்னக் கக்கியாரும் உடும்பாறு மலைக்கருகில் வைத்து அழுதயாரும் பண்ணியாரும் வந்து சேரும் போது தான் பம்பையாரின் நீர்வரத்து சக்தியடைகிறது. கக்காட்டு ஆறும், கல்லாரும் பம்பையை சக்திப்படுத்தும் நதிகளாகும். அச்சன்கோவிலாரினுடையவும், மணிமலையாரினுடையவும் ஒவ்வொரு கிளையும் பம்பையில் சேர்கிறது.
       உற்பத்தியாகும் இடத்திலிருந்து 176 கி.மீ பாய்ந்து பல கிளைகளாகப் பிரிந்து பம்பை வேம்பநாட்டுக் காயலில் கலக்கிறது. கேரளத்தின் நெல்லறை என்றழைக்கப்படும் குட்டநாட்டின் வேளாண் அபிவிருத்திக்கு காரணம் பம்பை நதியாகும். அதனால் தான் குட்டநாட்டை பம்பையின் தானம் என்றழைக்கிறார்கள். ஆலப்புழை மாவட்டத்தையும் இவ்வாறு தான் அழைக்கிறார்கள்.
       பிரசித்திபெற்ற ஆரன்முளை- உத்யாட்டாதி வள்ளம்களி நடைபெறுவது பம்பை நதியிலாகும். வள்ளம் களி ஐந்து நாள் நடைபெற்றாலும் உத்யாட்டாதி வள்ளம்களிக்குதான் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பார்த்தசாரதி கோவிலில் பிரதிஷ்டை நடத்துவதற்காக அர்ஜூனன் வள்ளத்தில் விக்ரகம் கொண்டுவந்ததை நினைவுகூர்வதற்காகத்தான் இந்த வள்ளம்களி நடைபெறுவதாக ஐதீகம்.
                     சரித்திரம் உறங்கும் சாலியார்
       பாரதப்புழையைப் போன்று தமிழ்நாட்டில் உற்பத்தியாகி கேரளத்தில் பாயும் வேறொரு நதியாகும் சாலியார்.. கூடலூர் தாலுகாவில் இலம்பலாரி மலைகளில் கடல் மட்டத்திலிருந்து 2066 மீட்டர் உயரத்தில் சாலியார் உற்பத்தியாகிறது. அங்கிருந்து வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு போன்ற மாவட்டங்களின் வழியாகப் பாய்ந்து சாலியார் அரபிக்கடலில் கலக்கிறது. இந்த நதியின் நீளம் 169 கி. மீட்டர் ஆகும்.
       கோழிக்கோட்டினுடையவும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளுடையவும் வளர்ச்சிக்கு முக்கியப் பங்கு வகித்த நதியாகும் சாலியார்.  இந்த நதி பழங்காலத்தில் சரங்குப் போக்குவரத்திற்குப் புகழ்பெற்ற நதியாக இருந்தது. நிலம்பூர் காடுகளிலிருந்து மரங்களை ஒழுக்கிக் கொண்டுவருவதற்கு சாலியாரும் அதன் கால்வாய்களும மிகப்பெரிய உதவியாக இருந்தது.
       சோளப்புழை, சாலிப்புழை, புண்ணப்புழை, பாண்டியார், கரிம்புழை, செருபுழை, குரிஞ்சிப்புழை, குரும்பன்புழை, வடபூரப்புழை, இரிஞ்சிப்புழை முதலியவை சாலியாரின் துணை நதிகளாகும்.
       சாலியார் பேப்பூரில் வைத்து அரபிக்கடலில் கலக்கிறது. அதனால் இதற்கு பேப்பூர் புழை என்றும் ஒரு பெயர் உள்ளது. பேப்பூர் துறைமுகத்தில் 1531- ல் போர்த்துகீசியர்கள் கட்டிய சாலியம் கோட்டை மிகவும் புகழ்பெற்றதாகும்.1672 – ல் சாமூதிரி இந்தக் கோட்டையை அழித்தார்.

கேரளத்திலுள்ள மிகப்பெரிய நதிகளைப் பற்றிப் பார்த்தோம் அல்லவா? இனி தென்கேரளத்திலுள்ள நதிகளைப் பற்றிப் பார்ப்போம்.

கல்லடயார்
       பொன்முடிக்கருகிலுள்ள குளத்துப்புழை மலைகளில் கல்லடயார் உற்பத்தியாகிறது. அஷ்டமுடிக் காயலில் இந்த ஆறு கலக்கிறது.. குளத்தூர் புழை,செந்தூர்ணிப்புழை, கல்துரத்திப்புழை முதலியவை இதன்  முக்கிய துணை நதிகளாகும் செந்தூர்ணிப்புழை கலங்குன்னில் வைத்து குழத்துப்புழையுடன் சேர்கிறது. பரப்பாறையில் வைத்து கல்துரத்திப்புழையும் சேருவதுடன் கல்லடயாறு உருவாகிறது. கல்குன்னில் வைத்து சிற்றாரும் கல்லடயாருடன் சேர்கிறது.
       கல்லட திட்டமும், பரப்பார அணையும் இந்த நதியிலாகும். கல்லடயாரின் நீளம் 121 கிலோமீட்டராகும்.
இத்திக்கரயாறு
       பொன்முடிக்கருகில் மடத்தூரிக்குன்றிலிருந்து குழத்துப்புழைக்கு அருகிலுள்ள மலைகளிலிருந்து இத்திக்கரையாறு உற்பத்தியாகிறது. கடல் மட்டத்திலிருந்து 240 கி,மீ உயரத்திலிருந்து இத்திக்கரயாறு ஆரம்பமாகிறது. பத்னாபுரம், கொட்டாரக்கரை முதலிய ஊர்களின் வழியாக பாய்ந்து இத்திக்கரயாறு பரவூர்காயலில் கலக்கிறது. குண்டமன்தோடும், வட்டப்பரப்பு தோடும் முக்கிய துணை நதிகளாகும். நீளம் 56 கிலோமீட்டராகும்.
மாமம்புழை
திருவனந்தபுரம் மாவட்டத்தில் வெம்பயத்திற்கருகிலுள்ள பந்தலகோட்டு மலையில் மாமம் புழை உற்பத்தியாகிறது. அஞ்சுதெங்குக் காயலில் இந்த நதிக் கலக்கிறது. இதன் ஒரு பகுதி வாமனபுரம் ஆறில் கலக்கிறது. நீளம் 27 கிலோமீட்டர் .
அயிரூர்புழை
நாவாயிக்குளத்தில் ஆரம்பமாகும் அயிரூர்புழை இடவ- தடயர காயலில் கலக்கிறது. நீளம் 17 கி. மீட்டர் மட்டுமாகும். இதில் 1 கிலோமீட்டர் மட்டுமே போக்குவரத்திற்கு உகந்தது.
கரமனயாறு
அகஸ்தியக்கூட மலைத்தொடர்களில் இருந்து ஆரம்பித்து திருவனந்தபுரத்தின் தென்பகுதி வழியாகப் பாய்ந்து தோட்டு முக்கில் வைத்து அரபிக்கடலில் பதிக்கும் நதியாகும் கரமனயாறு. திருவனந்தபுரம் நகரத்தின் குடிதண்ணீர் திட்டத்திற்கான அருவிக்கரை திட்டம் கரமனயாற்றிலிருந்தாகும்.
நெய்யார்
கேரளாவின் தென்கோடியில் உள்ள நதியாகும் நெய்யார். கடல்மட்டத்திலிருந்து 1860 மீட்டர் உயரத்தில் அகஸ்தியக்கூட மலைகளிலிருந்து இந்த நதி உற்பத்தியாகிறது. பூவாரில் வைத்து அரபிக்கடலில் கலக்கிறது. நெய்யாரின் நீளம் 56 கி. மீட்டராகும்.
         நாராயணகுரு முதன்முதலாக பிரதிஷ்டை நடத்திய அருவிப்புரம் நெய்யாரின் கரையிலாகும்.




மத்திய கேரளத்திலுள்ள நதிகள்
சாலக்குடிப்புழை முதல் அச்சன் கோவிலாறு வரையுள்ள நதிகள் மத்திய கேரளத்தில் உள்ள நதிகள் என்றழைக்கப்படுகிறது.
சாலக்குடிப்புழை
பரம்பிக்குளம், குரியார்குட்டி, சோளையார், கரப்பார, ஆனக்கயம் போன்ற நீர் ஒழுக்குகள் சேர்ந்து உருவானதுதான் சாலக்குடிப்புழை. பெரிங்கல்குத்து, அதிரப்பள்ளி, வாழச்சால் போன்ற புகழ்பெற்ற ஏராளமான நீர்வீழ்ச்சிகளுக்குப் புகழ்பெற்றதாகும் இந்த நதி.
       சோலையார், பெரிங்கல்குத்து நீர்மின் திட்டமும், சாலக்குடி நீர்பாசனத்திட்டமும் இந்த நதியிலாகும். எர்ணாகுளத்திற்கருகில் உள்ள எழந்திக்கரையில் வைத்து சாலக்குடிப்புழை பெரியாரில் சேர்கிறது. இதன் நீளம் 130 கி. மீட்டராகும்.
மூவாற்றுப்புழையாறு
காளியார், கோதமங்கலம்புழை ஆகிய புழைகள் சேர்ந்துதான் மூவாற்றுப்புழையாறு உருவாகிறது. மூவாற்றுப்புழையிலிருந்து தென்மேற்காக பாயும் போது முரிஞ்சபுழை, இஞ்சிப்புழை போன்ற பல கால்வாய்களாகவும், பற்பல நீர்வீழ்ச்சிகளாகவும் பிரிந்து இந்த நதி வேம்பநாட்டுக்காயலில் கலக்கிறது. இதன் நீளம் 121 கி. மீட்டராகும்.
மீனச்சிலாறு
அருந்ததி ராய்க்கு புக்கர் பரிசு பெற்றுக்கொடுத்த காட் ஆப் ஸ்மால் திங்ஸ் என்ற நாவலில் கதை நடைபெறுவது மீனச்சிலாரின் கரையிலாகும்.
       பூஞ்சார், பாலா, ஏற்றமானூர், கோட்டயம் முதலிய இடங்களின் வழியாகப் பாய்ந்து வேம்பநாட்டுக்காயலில் கலக்கும் நதியாகும் மீனச்சிலாறு. பல்வேறு கிளைகள் இந்த நதிக்கு உள்ளது.
       கிழக்கு மலைகளிலிருந்து மீனச்சிலாறு தொடங்குகிறது. களத்துக்கடயாறும், திருக்கோவிலாறும் சேர்ந்து மீனச்சிலாறு தெற்கு நோக்கிப் பாய்கிறது. பூஞ்சார்புழை ஈராற்றுப்பேட்டையில் வைத்தும் சிற்றார் கொண்டூரில் வைத்தும் இந்த ஆறுடன் சேர்கிறது. பாலாவுக்கருகில் பயப்பாரத்தோடும் இதனுடன் சேரும் போது மீனச்சிலாற்றில் தண்ணீரின் அளவு அதிகரிக்கிறது.
       கோட்டயத்துக்கருகில் வைத்து இரண்டாகப் பிரியும் மீனச்சிலாறு வேம்பநாட்டுக்காயலில் சென்று கலக்கிறது. இதன் மொத்த நீளம் 78 கி. மீட்டராகும்.
அச்சன்கோவிலாறு
அச்சன்கோவில் மலைத்தொடர்களிலுள்ள பசுக்கிடாமேடு, ராமக்கல்தேரி, கூவமலை, ரிஷிமலை போன்ற இடங்களில் இருந்து வரும் சிறிய புழைகள் ஒன்று சேர்ந்துதான் அச்சன் கோவிலாறு உருவாகிறது. வேம்பநாட்டுக் காயலிற்கு அருகில் வைத்து அச்சன்கோவிலாறு பம்பாநதியில் சேர்கிறது.
       தொரைவனங்களில் இருந்து வரும் கல்லாறு தான் அச்சன்கோவிலாறின் முக்கிய துணைநதியாகும். இதன் நீளம் 128 கிலோமீட்டராகும்.
மணிமலையாறு
கடல்மட்டத்திலிருந்து 1156 மீட்டர் உயரத்திலிருந்து மணிமலையாறு உற்பத்தியாகிறது. கொக்கையாறு, ஏந்தையார் போன்ற ஏராளமான நீரோடைகள் இந்த நதியில் கலக்கிறது. நீரேற்றுப்புரத்தில் வைத்து மணிமலையாறு பம்பாநதியில் சேருகிறது. இதன் நீளம் 90 கி. மீட்டராகும். இதில் 53 கிலோமீட்டரும் போக்குவரத்திற்குப் பயன்படுகிறது.







வடகேரளத்திலுள்ள நதிகள்
மஞ்சேஸ்வரம் புழை முதல் புழக்கலாறு வரையுள்ள புழைகளாகும் வடகேரளத்திலுள்ள நதிகள்.
மஞ்சேஸ்வரம் புழை
கேரளத்தின் வடகோடியிலுள்ள நதியாகும் மஞ்சேஸ்வரம் புழை.மொத்தம் 16 கி. மீட்டர் மட்டும் நீளமுள்ள இந்த நதி உப்பளயாரில் சேர்கிறது.
உப்பள ஆறு
கர்நாடகத்திலுள்ள வீரகம்ப மலைகளில் உற்பத்தியாகும் நதியாகுமிது. காசர்கோடு மாவட்டதின் தென்மேற்கு பகுதி வழியாகப் பாய்ந்து மஞ்சேஸ்வரத்திற்கு அருகில் வைத்து உப்பள ஆறு கடலில் கலக்கிறது. சுமார் 50 கிலோமீட்டர் நீளம் உள்ளது.
சிரிய நதி
கர்நாடகாவிலுள்ள ஆனெகண்டி மலைகளில் உற்பத்தியாகி குப்பளக் காயலில் கலக்கும் நதியாகும் சிரியா. பல்லதட்க, எராமட்டி, கன்யனத்தோடு, கல்லஜத்தோடு  போன்றவையே 67 கிலோமீட்டர் நீளமுள்ள சிரிய நதியின் துணை நதிகள்.
மொக்ரால் நதி
காசர்கோட்டிலுள்ள ஸத்தூர் கரத்க காடுகளில்  இருந்து உற்பத்தியாகும் மொக்ரல் நதிக்கு 34 கிலோமீட்டர் நீளம் உள்ளது. பெற்றிப்பாடி, மூலியூர், யெதீர், மதுர், பட்ல போன்ற இடங்களின் வழியாக பாய்ந்து அரபிக்கடலில் கலக்கிறது.
சந்திரகிரிப்புழை
காசர்கோடு மாவட்டத்திலுள்ள முக்கியமான நதிகளில் ஒன்றாகும் சந்திரகிரிப்புழை. வரலாற்றுப் புகழ் வாய்ந்த பயஸ்வினி நதி கலப்பது இந்த நதியிலாகும். மாவட்டத்தின் முக்கியப் புகழ்வாய்ந்த மையங்களில் ஒன்றாகும் இந்த நதிக்கு 105 கி.மீட்டர் நீளமுள்ளது.
சிற்றாரிப்புழை
காசர்கோடு மாவட்டத்தில் தயகொளம், செரம்பெ போன்ற இடங்களின் வாயிலாக பாய்ந்து செல்லும் நதியாகும் சிற்றாரிப்புழை. இதன் நீளம் 25 கிலோமீட்டர்.
கரியங்கோட்டுப்புழை
கர்நாடகாவில் கடுகு மாவட்டத்தில் உள்ள படிநல்காடு மலைகளிலிருந்து கரியங்கோட்டுப்புழை உற்பத்தியாகிறது. உற்பத்தியாகும் இடத்தின் உயரம் கடல்மட்டத்திலிருந்து சுமார் 1520 மீட்டராகும். இது அரபிக்கடலில் கலக்கிறது. முந்தோர், படியமலை, முந்ரோத் போன்றவை கரியங்கோட்டுப்புழையின் முக்கிய துணை நதிகளாகும். இதற்கு புளிங்கோருச்சால் என்ற பெயரும் உண்டு. நீலேஸ்வரம் நதியுடன் சேர்ந்து அரபிக்கடலில் கலக்கும் இந்த நதியின் நீளம் 64 கிலோமீட்டராகும்.
கவ்வாயிப்புழை
வரலாற்றுப் புகழ்பெற்ற சீமேனி கிராமத்திலிருந்து உற்பத்தியாகும் புழையாகுமிது. உடவந்தை என்ற இடத்தில் வைத்து இது கவ்வாயிக் காயலில் கலக்கிறது. 31 கிலோமீட்டர் நீளமுள்ளது.
பெருவெம்பயாறு
கண்ணூர் மாவட்டத்தில் வயக்கர கிராமத்திலிருந்து உற்பத்தியாகும் புழையாகும் பெருவெம்பயாறு. மச்சருதோடு, முக்கூட்டன்கரச்சால், நீடரிங்கம் புழை முதலிய நீரோடைகள் பெருவெம்பயாறுடன் சேர்கிறது. ஏழிமலையில் வைத்து இது இரண்டாகப் பிரிந்து ஒரு கிளை அரபிக்கடலிலும், மற்றொன்று கவ்வாயிக்காயலிலும் கலக்கிறது.
ராமபுரம் புழை
கண்ணூர் மாவட்டத்தில் பரியாரம், கொளப்பாடு வய்ல் செருதாழம், மாடாயி முதலிய இடங்களில் வழியாகப் பாய்ந்து கவ்வாயிக்காயலில் சேர்கிறது. இதன் நீளம் 19 கிலோமீட்டர்.



குப்பம் நதி
கர்நாடக மாநிலத்தில் உள்ள படிநல்காட்டிலிருந்து குப்பம் நதி உற்பத்தியாகிறது. அழீக்கலுக்கு அருகில் உள்ள மாடாயிக் கரையில் குப்பம் நதி கடலில் கலக்கிறது. வக்காட்டுப்புழை, அலக்கூட்டத்தோடு, சிரயாத்தோடு போன்றவை குப்பம் நதியின் துணை நதிகளாகும். 82 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த நதியின் 24 கிலோமீட்டர் மட்டுமே போக்குவரத்திற்கு ஏற்றதாக உள்ளது.
வளப்பட்டணம் புழை
கடல்மட்டத்திலிருந்து 1350 மீட்டர் உயரத்திலுள்ள பிரம்மகிரி வனங்களிலிருந்து உற்பத்தியாகும் நதியாகும் வளப்பட்டணம் புழை.அழிக்கலில் வைத்து இது அரபிக்கடலில் கலக்கிறது. கடலில் கலப்பதற்கு முன்பு வளப்பட்டணம் புழை குப்பம் நதியுடன் சேர்கிறது. சிரிகண்டபுரம், வலியபுழை, பாரப்புழை, வேணிப்புழை,ஆரளம்புழை முதலியவை வளப்பட்டணம் புழையின் துணைநதிகளாகும். இதன் மொத்த நீளம் 110 கிலோமீட்டராகும்.
அஞ்சரக்கண்டிப்புழை
கடல் மட்டத்திலிருந்து 600 மீட்டர் உயரத்திலுள்ள குண்ணோத்து வனங்களில் உற்பத்தியாகிறது. தலைச்சேரிக்கு அருகில் வைத்து அஞ்சரக்கண்டிப்புழை அரபிக்கடலில் சேர்கிறது. குப்பத்தோடு, இடும்பத்தோடு போன்றவை அஞ்சரக்கண்டிப் புழையின் முக்கிய துணை நதிகளாகும்.
பொண்ணியம் புழை
தலச்சேரிப்புழை என்றழைக்கப்படும் பொண்ணியம் புழை குண்ணோத்து வனங்களில் உற்பத்தியாகிறது. தலச்சேரியின் வடபகுதியிலுள்ள மண்ணயாடு என்ற இடத்தில் வைத்து இது அரபிக்கடலில் கலக்கிறது. பொண்ணியம் புழையின் மொத்த நீளம் 28 கிலோமீட்டராகும்.
மய்யழிப்புழை
கடல் மட்டத்திலிருந்து 910 மீட்டர் உயரத்தில் உள்ள வயநாடன் மலைகளிலிருந்து உற்பத்தியாகும் நதியாகும் மய்யழிப்புழை. மாஹியில் வைத்து இது அரபிக்கடலில் கலக்கிறது. இந்தப் புழைக்கு துணை நதிகள் ஒன்றுமில்லை.
குற்றியாடிப்புழை
வடகரை, கொயிலாண்டி, கோழிக்கோடு தாலுகாக்கள் வழியாக  பாய்ந்து கோட்டைய்க்கலில் வைத்து கடலில் சேரும் நதியாகும் குற்றியாடிப்புழை. முராடுப்புழை, கோட்டய்க்கல்புழை, போன்ற பெயர்களும் இதற்கு உண்டு.
       குற்றியாடிப்புழையின் முக்கிய துணைநதிகள் ஓணிப்புழை, தொட்டில்பாலம் புழை, கடியங்காடுபுழை, வண்ணத்தில் புழை, மடப்பள்ளிப்புழை போன்றவையாகும்.
       குற்றியாடிப்புழையின் அணை பெருவண்ணாமூழியிலாகும். நீர்மின் திட்டம் குற்றியாடியிலும் உள்ளது. குற்றியாடித் திட்டத்துடன் சேர்ந்த  பறவைகள் சரணாலயம், முதலை வளர்ப்பு மையமும் செயல்படுகிறது.
கோரப்புழை
அரிக்கன் குன்றுகளிலிருந்து உற்பத்தியாகும் பூனூர் புழையும், வயநாடன் மலைகளில் இருந்து பாய்ந்து வரும் அகப்புழையும் சேர்ந்த புழையாகும் கோரப்புழை. கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள எலத்தூருக்கு அருகில் வைத்து சேர்வதால் எலத்தூர்புழை என்றும் இது அழைக்கப்படுகிறது.
கடலுண்டிப்புழை
கடல் மட்டத்திலிருந்து சுமார் 1160 மீட்டரி உயரத்திலுள்ள சேரகொம்பன் மலைத்தொடர்களிலிருந்து வரும் ஒலிப்புழையும் 1190 மீட்டர் உயரத்திலுள்ள இரட்டக்கொம்பன் மலைகளிலிருந்து வரும் வேலியாறும் சேர்ந்துதான் கடலுண்டிப்புழை உருவாகிறது.கரிம்புழையென்றும், ஒரவன்புழையென்றும் இது அழைக்கப்படுகிறது. மலப்புரம் மாவட்டத்திலுள்ள பல பகுதிகளில் பாய்ந்து கடலுண்டிப்புழை அரபிக்கடலில் கலக்கிறது. இதன் மொத்த நீளம் 130 கிலோமீட்டராகும். அபூர்வஇனம் வலசைப் பறவைகளின் தங்குமிடமாகும் கடலுண்டிப்புழை.
திரூர்புழை
கடல் மட்டத்திலிருந்து 86 மீட்டர் உயரத்தில் உற்பத்தியாகும் திரூர்புழை திருனாவாய வழியாக பாய்ந்து பொன்னானியில் வைத்து பாரதப்புழையுடன் சேருகிறது. வள்ளிலபுழை என்றும் இது அழைக்கப்படுகிறது.
கோச்சேரிப்புழை
கேரளத்திலுள்ள மிகச்சிறிய நதிகளிலொன்றாகும் கேச்சேரிப்புழை என்றழைக்கப்படும் கீச்சேரிப்புழை. இது உற்பத்தியாவது மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள தலப்பள்ளி பகுதியிலிருந்தாகும். வடக்காஞ்சேரி நதியென்றும் ஆளூர் புழையென்றும் கேச்சேரிப்புழை அழைக்கப்படுகிறது.
கருவண்ணூர் புழை
வாணியப்பாறை மலைகளிலிருந்து உற்பத்தியாகும் மணலிப்புழையும், சிம்மினி, மூப்பிலியம் புழைகள் சேர்ந்து உருவாகும் குருமாலிப்புழையும், பிள்ளத்தோடும் சேர்ந்து தான் கருவண்ணூர் புழை உருவாகிறது. இதனுடைய ஒரு கிளை அரபிக்கடலில் கலக்கிறது.
புழய்கலாறு
பாறத்தோடும் பூமலத்தோடும் நடுத்தோடும் சேர்ந்த புழை. திருச்சூருக்கு அருகில் பாய்ந்து அரபிக்கடலில் கலக்கிறது

              கிழக்கு நோக்கிப் பாயும் நதிகள்
கிழக்கு நோக்கிப் பாயும் மூன்று நதிகள் கேரளத்தில் உள்ளது. கபனி, பவானி, பாம்பார் முதலியன
       வயநாடு மாவட்டத்தில் உற்பத்தியாகி வடக்கு கிழக்குப் பகுதிகளிலாக பாயும் நதியாகும் கபனி. இதன் நீளம் 210 கிலோமீட்டராகும். பனமரம், மானந்தவாடி, நூல்புழை, சுகு போன்றவை கபனி நதியின் துணை நதிகளாகும். திருமுக்கூடல் என்ற இடத்தில் வைத்து கபனி, காவேரி நதியுடன் சேர்கிறது. காவேரி நதியின் முக்கிய துணை நதிகளில் ஒன்றாகும் கபனி. புதுச்சேரிபுழை, மக்கிப்புழை, நிரப்பில்புழை என்றும் இதற்கு பெயருண்டு.
       மானந்தவாடி நீர்பாசனத்திட்டம், காரப்புழை நீர்மின்திட்டம் பாணாஸூரஸாகர் போன்றவை கபனி நதியிலுள்ள முக்கியத் திட்டங்களாகும்.
       பாம்பாரும், பவானியும் தமிழ்நாட்டை நோக்கியே பாய்கிறது. இடுக்கி மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் பாயும் நதியாகும் பாம்பார். சைலண்ட்வாலியிலிருந்து பாய்ந்து பவானியில் வைத்து கவேரியுடன் சேருவதே பவானி நதி. வரகர், குந்த, குனூர், மோயர், அட்டப்பாடியின் வழியாக பாயும் சிறுவாணி போன்றவை இதன் துணை நதிகளாகும். 216 கிலோமீட்டர் நீளமுள்ள பவானி நதியின் நீர்பிடிப்புப் பகுதியின் பரப்பளவு 7144 சதுர கிலோமீட்டராகும்.
இந்த நதிகள் எல்லாம் சேரும் கவேரிக்கு 800 கிலோமீட்டர் நீளமுண்டு. 87,900 கிலோமீட்டராகும் இதன் நீர்பிடிப்புப் பகுதி. இதில் 3.3 சதவீதம் கேரளத்தின் நன்கொடையாகும்.











No comments:

Post a Comment