மொகலாயப்
பேரரசு
Ø இந்தியாவில் மொகலாயப்
பேரரசிற்கு அடித்தளம் இட்டப் போர் முதலாம் பானிப்பட்டுப்போர்
Ø 1526 இல் நடந்த
முதலாம் பானிப்பட்டுப்போரில் இப்ராகிம் லோடியைத் தோற்கடித்து பாபர் மொகலாயப்
பேரரசை இந்தியாவில் நிறுவினார்.
Ø பாபரை இந்தியாவிற்கு
அழைத்தவர் தொலத்கான்
Ø பாபர் என்ற பெயருக்கு
சிங்கம் என்றும் வீரன் என்றும் பொருள் உண்டு.
Ø தாய்வழியில்
செங்கிஸ்கான், தந்தை வழியில் தீமூரின் உறவினராக இருந்தார் பாபர்
Ø பாபர் பிறந்த
வம்சம் சாகத்தாய் துர்க்கி
Ø மிகவும் சாகசிகனாய
மொகலாய ஆட்சியாளர் பாபர்
Ø 1527 இல் கன்வ போரில்
பாபர் ராணா சம்கிராம சிங்கனை ( ராணாசங்க) தோற்கடித்தார்.
Ø 1529 இல் காக்ரா போரில் பாபர் நஸ்ரத்சாவை
தோற்கடித்ததுடன் மொகலாயார்களின் ஆட்சி இந்தியா முழுவதும் பரவியது.
Ø எனக்கு இந்தியாவையும்
இந்திய மக்களையும் விருப்பமில்லை என்று கூறிய
அரசர் பாபர்
Ø இந்தியாவில் முதன்
முதலாக பீரங்கியையும் வெடிமருந்தையும் பயன்படுத்தியவர் பாபர்
Ø துருக்கி மொழியில்
பாபர் எழுதிய சுய சரிதையின் பெயர் துசாக்கி- இ- பாபரி
Ø இந்தியாவில்
மிகப்பழமையான மொகலாயப் பூந்தோட்டத்தை நிறுவியவர் பாபர்.
Ø 1530 இல் பாபர்
ஆக்ராவில் வைத்து மரணமடைந்தார்.
Ø பாபரின் உடல் அடக்கம்
செய்யப்பட்ட இடம் காபூல் ( ஆப்கானிஸ்தானில்)
Ø பாபரின் உடல் முதலில்
ஆக்ராவிலுள்ள ஆரம்பாகில் அடக்கம் செய்யப்பட்டது.
Ø பதினைந்து வருட காலம்
வெளிநாட்டில் வாழ்ந்த மொகலாயப் பேரரசர் ஹூமாயூன்
Ø பாபரின் மூத்தமகன்
ஹூமாயூன்
Ø ஹூமாயூன் என்ற
வார்த்தையின் பொருள் அதிர்ஷடசாலி
Ø ஹூமாயூன் பிறந்த இடம்
காபூல்
Ø டில்லியில் தீன்பான
என்ற நகரத்தை தோற்றுவித்தவர் ஹூமாயூன்
Ø ஹூமாயூனின் வாழ்க்கை
வரலாறான ஹூமாயூன் நாமாவை பாரசீக, துருக்கி மொழிகளில்
மொழிபெயர்த்தவர் அவருடைய சகோதரி குல்பதன் பீகம்.
Ø 1539 இல் சௌரா
போரிலும், 1540 இல் கனோஜ் போரிலும் ஷெர்ஷா ஹூமாயூனை தோற்கடித்தார்.
Ø கங்கா போர்,
பீல்கிராம் போர் என்ற பெயர்களில் கனௌஜ்
போர் அழைக்கப்படுகிறது.
Ø 1555 ல் ஷெர்ஷாவின்
வாரிசான சிக்கந்தர் சூரியை தோற்கடித்து ஹூமாயூன் டில்லியில் மீண்டும் மொகலாயப்
பேரரசை நிறுவினார்.
Ø ஹூமாயூன்
ஆட்சிக்காலத்தில் வாழ்ந்திருந்த புகழ்பெற்ற ஒவியர்கள் சையது அலி, சமது
Ø நிசாம் என்ற பெயருள்ள
ஒடம் ஒட்டுபவரை ஒரு நாள் அரசன் பதவி கொடுத்தவர் ஹூமாயூன்
Ø அதிகமான அளவில்
செங்கலால் கட்டப்பட்ட இந்தியாவில் முதல் கட்டிடமான புராண கிலா- வை கட்ட
ஆரம்பித்தவர் ஹூமாயூன்
Ø புராணா கிலாவை கட்டி
முடித்தவர் ஷெர்ஷா
Ø புராணா கிலாவிலிருந்த
ஷேர் மண்டல் நூலக மாடிப்படியில் இருந்து கீழே விழுந்து 1556 இல் ஹூமாயூன்
மரணமடைந்தார்.
Ø ஹூமாயூனின் மனைவியான
ஹமீதா பானு பீகம் டில்லியிலுள்ள ஹூமாயூனின் கல்லறையைக் கட்டினார்.
Ø பாரசீக சிற்பியான
மிர்ஸா குவியாஸ் இந்த கல்லறையை வடிவமைத்தார்.
Ø திமுர்
தலைமுறையினரின் ஓய்விடம் என்றழைக்கப்படும் இந்த கல்லறை 1993 ஐக்கிய நாட்டுச்
சபையின் உலக அதிசயங்களின் பட்டியலில் இடம் பிடித்தது.
Ø ஹூமாயூனின் கல்லறை
தாஜ்மகாலின் முன்னோடியாக கருதப்படுகிறது.
Ø சாராயி என்ற பெயரில்
சத்திரங்களை நிறுவிய டில்லியின் ஆட்சியாளர் ஷெர்ஷா.
Ø ஷெர்ஷாவின் பேரரசின்
இரத்த தமனிகள் என்று சத்திரங்கள் அழைக்கப்பட்டது.
Ø சூர் அரச வம்சத்தை
நிறுவியவர் பரீத் கான் என்றழைக்கப்படும் ஷெர்ஷா சூரி ஆவார்.
Ø ஆப்கான் தலைவரான இவர்
ஷேர்கான் என்ற பெயரில் டில்லியை ஆட்சி செய்தார்.
Ø ஷெர்ஷாவின் தந்தையின்
பெயர் ஹஸன்.
Ø 1540 முதல் 1545 வரை
மட்டுமே ஷெர்ஷா டில்லியை ஆட்சி செய்தார்.
Ø இந்தியாவின் ரூபாய்
முறையின் தந்தை என்றழைக்கப்படுபவர் ஷெர்ஷா சூரியாவார்.
Ø மொகர் என்ற தங்க
நாணயத்தையும் ரூப்யா என்ற வெள்ளி நாணயத்தையும், தாம் என்ற செம்பு நாணயத்தையும்
ஷெர்ஷா வெளியிட்டார்.
Ø கொல்கத்தாவையும்
பெசாவரையும் இணைக்கும் கிராண்ட் டிரங் ரோட் அமைத்தவர் ஷெர்ஷா சூரி ஆவார்.
Ø ஸடக்- இ- அஸம் (பேரரசரின் பாதை) என்றழைக்கப்படும் பாதை கிராண்ட் டிரங் ரோட்
Ø பாட்னா நகரத்தின்
சிற்பி என்றழைக்கப்படுபவர் ஷெர்ஷா
Ø ஷெர்ஷாவின் காலத்தில்
வாழ்ந்திருந்த புகழ்பெற்ற ஹிந்தி கவிஞர் மாலிக் முகம்மது ஜைஸி
Ø மாலிக் முகம்மது
ஜையின் புகழ்பெற்ற நூல் பத்மாவத்
Ø சித்தூர் அரசி
பத்மாவதியை சொந்தமாக்குவதற்காக சுல்த்தான் அலாவுதீன் கில்ஜி சித்தூர் மீது போர்
செய்ததும் அரசியும் அவர்களைச் சேர்ந்தவர்களும் தீயில் குதித்து இறந்ததும் இந்த
நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Ø அக்பரின் காலத்தில்
வாழ்ந்திருந்த அப்பாஸ் கான் ஸர்வனி ஷெர்ஷாவைப் பற்றி எழுதிய நூல் தாரிக்- இ-
ஷெர்ஷா
Ø கலிஞ்சர் கோட்டையை
பிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 1545 இல்
ஷெர்ஷா கொல்லப்பட்டார்.
Ø பொது ஆட்சி அமைப்பை
உருவாக்குவதற்காக முயற்சி செய்த முதல் முஸ்லீம் ஆட்சியாளர் ஷெர்ஷா ஆவார்.
Ø மொகலாயர்களுக்கு ஒரு
ஒருங்கிணைந்த ஆட்சி முறையை நன்கொடையாக வழங்கியவர் ஷெர்ஷா ஆவார்.
Ø பீகாரிலுள்ள சசாரம்
என்ற இடத்தில் இவர் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
Ø தன்னுடைய கல்லறையை
தானாவே அமைத்தவர் ஷெர்ஷா ஆவார்.
மொகலாய ஆட்சியின்
முக்கியமான ஆட்சியாளர்கள்
|
பட்டப் பெயர்
|
உண்மையான பெயர்
|
ஆட்சிக்காலம்
|
|
பாபர்
|
சகிருதீன் முகம்மது
|
1526-1530
|
|
ஹூமாயூன்
|
நசிருதீன் மிர்ஸா
முகம்மது
|
1530-1540
1555-1556
|
|
அக்பர்
|
ஜலாலுதீன் முகம்மது
|
1556-1605
|
|
ஜஹாங்கீர்
|
நூருதீன் முகம்மது சலீம்
|
1605-1627
|
|
ஷாஜகான்
|
சகாபுதீன் முகம்மது குரம்
|
1627-1658
|
|
ஔரங்கசீப்
|
முஹியுதீன் முகம்மது
|
1658-1707
|
No comments:
Post a Comment