வாழ்க வளமுடன்

Sunday, 31 July 2016

:: Pay Revision Arrear Calculator

:: Pay Revision Arrear Calculator: പത്താം ശമ്പള പരിഷ്കരണ ഉത്തരവ് പ്രകാരം  2014 ജൂലൈ മുതല്‍ 2016 ജനുവരി വരെയുള്ള ശമ്പള കുടിശ്ശിക 01/04/2017, 01/10/2017, 01/04/2018, 01/10/2...

Saturday, 30 July 2016

:: E Filing of Income Tax Return

:: E Filing of Income Tax Return: E Filing Website   | Income Tax Help   |   Income Tax Help Links Video on E Filing 2015-16 വര്‍ഷത്തെ ഇന്‍കം ടാക്സ് കഴിഞ്ഞ ഫെബ്രുവരി...

Friday, 8 July 2016

ചൂണ്ടുവിരല്‍: വട്ടേനാട് സ്കൂളില്‍ വായനയ്ക് സ്വന്തം പാഠ്യപദ്ധതി

ചൂണ്ടുവിരല്‍: വട്ടേനാട് സ്കൂളില്‍ വായനയ്ക് സ്വന്തം പാഠ്യപദ്ധതി: വട്ടേനാട് എല്‍ പി സ്കൂളിലെ എം വി രാജന്‍മാഷ് വായനയ്ക് സ്വന്തമായി ഒരു പാഠ്യപദ്ധതി തയ്യാറാക്കിയിട്ടുണ്ട് . അതാകട്ടെ ക്ലാസനുഭവങ്ങളിലൂ...

Sunday, 3 July 2016

மொகலாயப் பேரரசு

Ø  இந்தியாவில் மொகலாயப் பேரரசிற்கு அடித்தளம் இட்டப் போர் முதலாம் பானிப்பட்டுப்போர்
Ø  1526 இல் நடந்த முதலாம் பானிப்பட்டுப்போரில் இப்ராகிம் லோடியைத் தோற்கடித்து பாபர் மொகலாயப் பேரரசை இந்தியாவில் நிறுவினார்.
Ø  பாபரை இந்தியாவிற்கு அழைத்தவர் தொலத்கான்
Ø  பாபர் என்ற பெயருக்கு சிங்கம் என்றும் வீரன் என்றும் பொருள் உண்டு.
Ø  தாய்வழியில் செங்கிஸ்கான், தந்தை வழியில் தீமூரின் உறவினராக இருந்தார் பாபர்
Ø  பாபர் பிறந்த வம்சம்  சாகத்தாய் துர்க்கி
Ø  மிகவும் சாகசிகனாய மொகலாய ஆட்சியாளர் பாபர்
Ø  1527 இல் கன்வ போரில் பாபர் ராணா சம்கிராம சிங்கனை ( ராணாசங்க) தோற்கடித்தார்.
Ø  1529  இல் காக்ரா போரில் பாபர் நஸ்ரத்சாவை தோற்கடித்ததுடன் மொகலாயார்களின் ஆட்சி இந்தியா முழுவதும் பரவியது.
Ø  எனக்கு இந்தியாவையும் இந்திய மக்களையும் விருப்பமில்லை என்று கூறிய  அரசர் பாபர்
Ø  இந்தியாவில் முதன் முதலாக பீரங்கியையும் வெடிமருந்தையும் பயன்படுத்தியவர் பாபர்
Ø  துருக்கி மொழியில் பாபர் எழுதிய சுய சரிதையின் பெயர் துசாக்கி- இ- பாபரி
Ø  இந்தியாவில் மிகப்பழமையான மொகலாயப் பூந்தோட்டத்தை நிறுவியவர் பாபர்.
Ø  1530 இல் பாபர் ஆக்ராவில் வைத்து மரணமடைந்தார்.
Ø  பாபரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம் காபூல் ( ஆப்கானிஸ்தானில்)
Ø  பாபரின் உடல் முதலில் ஆக்ராவிலுள்ள ஆரம்பாகில் அடக்கம் செய்யப்பட்டது.
Ø  பதினைந்து வருட காலம் வெளிநாட்டில் வாழ்ந்த மொகலாயப் பேரரசர் ஹூமாயூன்
Ø  பாபரின் மூத்தமகன் ஹூமாயூன்
Ø  ஹூமாயூன் என்ற வார்த்தையின் பொருள் அதிர்ஷடசாலி
Ø  ஹூமாயூன் பிறந்த இடம் காபூல்
Ø  டில்லியில் தீன்பான என்ற நகரத்தை தோற்றுவித்தவர் ஹூமாயூன்
Ø  ஹூமாயூனின் வாழ்க்கை வரலாறான ஹூமாயூன் நாமாவை பாரசீக, துருக்கி மொழிகளில் மொழிபெயர்த்தவர் அவருடைய சகோதரி குல்பதன் பீகம்.
Ø  1539 இல் சௌரா போரிலும், 1540 இல் கனோஜ் போரிலும் ஷெர்ஷா ஹூமாயூனை தோற்கடித்தார்.
Ø  கங்கா போர், பீல்கிராம்  போர் என்ற பெயர்களில் கனௌஜ் போர் அழைக்கப்படுகிறது.
Ø  1555 ல் ஷெர்ஷாவின் வாரிசான சிக்கந்தர் சூரியை தோற்கடித்து ஹூமாயூன் டில்லியில் மீண்டும் மொகலாயப் பேரரசை நிறுவினார்.
Ø  ஹூமாயூன் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்திருந்த புகழ்பெற்ற ஒவியர்கள் சையது அலி, சமது
Ø  நிசாம் என்ற பெயருள்ள ஒடம் ஒட்டுபவரை ஒரு நாள் அரசன் பதவி கொடுத்தவர் ஹூமாயூன்
Ø  அதிகமான அளவில் செங்கலால் கட்டப்பட்ட இந்தியாவில் முதல் கட்டிடமான புராண கிலா- வை கட்ட ஆரம்பித்தவர் ஹூமாயூன்
Ø  புராணா கிலாவை கட்டி முடித்தவர் ஷெர்ஷா
Ø  புராணா கிலாவிலிருந்த ஷேர் மண்டல் நூலக மாடிப்படியில் இருந்து கீழே விழுந்து 1556 இல் ஹூமாயூன் மரணமடைந்தார்.
Ø  ஹூமாயூனின் மனைவியான ஹமீதா பானு பீகம் டில்லியிலுள்ள ஹூமாயூனின் கல்லறையைக் கட்டினார்.
Ø  பாரசீக சிற்பியான மிர்ஸா குவியாஸ் இந்த கல்லறையை வடிவமைத்தார்.
Ø  திமுர் தலைமுறையினரின் ஓய்விடம் என்றழைக்கப்படும் இந்த கல்லறை 1993 ஐக்கிய நாட்டுச் சபையின் உலக அதிசயங்களின் பட்டியலில் இடம் பிடித்தது.
Ø  ஹூமாயூனின் கல்லறை தாஜ்மகாலின் முன்னோடியாக கருதப்படுகிறது.
Ø  சாராயி என்ற பெயரில் சத்திரங்களை நிறுவிய டில்லியின் ஆட்சியாளர் ஷெர்ஷா.
Ø  ஷெர்ஷாவின் பேரரசின் இரத்த தமனிகள் என்று சத்திரங்கள் அழைக்கப்பட்டது.
Ø  சூர் அரச வம்சத்தை நிறுவியவர் பரீத் கான் என்றழைக்கப்படும் ஷெர்ஷா சூரி ஆவார்.
Ø  ஆப்கான் தலைவரான இவர் ஷேர்கான் என்ற பெயரில் டில்லியை ஆட்சி செய்தார்.
Ø  ஷெர்ஷாவின் தந்தையின் பெயர் ஹஸன்.
Ø  1540 முதல் 1545 வரை மட்டுமே ஷெர்ஷா டில்லியை ஆட்சி செய்தார்.
Ø  இந்தியாவின் ரூபாய் முறையின் தந்தை என்றழைக்கப்படுபவர் ஷெர்ஷா சூரியாவார்.
Ø  மொகர் என்ற தங்க நாணயத்தையும் ரூப்யா என்ற வெள்ளி நாணயத்தையும், தாம் என்ற செம்பு நாணயத்தையும் ஷெர்ஷா வெளியிட்டார்.
Ø  கொல்கத்தாவையும் பெசாவரையும் இணைக்கும் கிராண்ட் டிரங் ரோட் அமைத்தவர் ஷெர்ஷா சூரி ஆவார்.
Ø  ஸடக்- இ- அஸம் (பேரரசரின் பாதை) என்றழைக்கப்படும் பாதை கிராண்ட் டிரங் ரோட்
Ø  பாட்னா நகரத்தின் சிற்பி என்றழைக்கப்படுபவர் ஷெர்ஷா
Ø  ஷெர்ஷாவின் காலத்தில் வாழ்ந்திருந்த புகழ்பெற்ற ஹிந்தி கவிஞர் மாலிக் முகம்மது ஜைஸி
Ø  மாலிக் முகம்மது ஜையின் புகழ்பெற்ற நூல் பத்மாவத்
Ø  சித்தூர் அரசி பத்மாவதியை சொந்தமாக்குவதற்காக சுல்த்தான் அலாவுதீன் கில்ஜி சித்தூர் மீது போர் செய்ததும் அரசியும் அவர்களைச் சேர்ந்தவர்களும் தீயில் குதித்து இறந்ததும் இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Ø  அக்பரின் காலத்தில் வாழ்ந்திருந்த அப்பாஸ் கான் ஸர்வனி ஷெர்ஷாவைப் பற்றி எழுதிய நூல் தாரிக்- இ- ஷெர்ஷா
Ø  கலிஞ்சர் கோட்டையை பிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 1545 இல் ஷெர்ஷா கொல்லப்பட்டார்.
Ø  பொது ஆட்சி அமைப்பை உருவாக்குவதற்காக முயற்சி செய்த முதல் முஸ்லீம் ஆட்சியாளர் ஷெர்ஷா ஆவார்.
Ø  மொகலாயர்களுக்கு ஒரு ஒருங்கிணைந்த ஆட்சி முறையை நன்கொடையாக வழங்கியவர் ஷெர்ஷா ஆவார்.
Ø  பீகாரிலுள்ள சசாரம் என்ற இடத்தில் இவர் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
Ø  தன்னுடைய கல்லறையை தானாவே அமைத்தவர் ஷெர்ஷா ஆவார்.

மொகலாய ஆட்சியின் முக்கியமான ஆட்சியாளர்கள்

பட்டப் பெயர்
உண்மையான பெயர்
ஆட்சிக்காலம்
பாபர்
சகிருதீன் முகம்மது
1526-1530
ஹூமாயூன்
நசிருதீன் மிர்ஸா முகம்மது
1530-1540
1555-1556
அக்பர்
ஜலாலுதீன் முகம்மது
1556-1605
ஜஹாங்கீர்
நூருதீன் முகம்மது சலீம்
1605-1627
ஷாஜகான்
சகாபுதீன் முகம்மது குரம்
1627-1658
ஔரங்கசீப்
முஹியுதீன் முகம்மது
1658-1707